நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • வினிதா மோகன்
இலக்கிய நடைகள்:

சுய முன்னேற்றம், பெண்கள் மேம்பாடு,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

திருமதி வினிதா மோகன் கரூர் மண்ணின் புதல்வி,
பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றவர், பள்ளி, கல்லூரி நாட்களில் வாழ்வில் ““தனித்தடம்"”
பதிக்கவேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தவர். சமூகத்தின் மீதான
அக்கறையையும் அப்போதே வளர்த்துக்கொண்டவர்.

இன்று ஒரு சிறந்த இல்லத்தரசி, வளர்ந்துவரும் தொழிலதீபர், கவனம்
ஈர்க்கும் ரோட்டரி நண்பர், 2018-2019ஆம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 300௦
இல் மாவட்ட உதவி ஆளுனராகச் சிறப்பாகப் பணியாற்றியவர், பிலிப்பைன்ஸ்,
தாய்லாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். நூல்
வாசிப்பு இவரது சுவாசம்; மக்கள் சேவை இவரது நேசம்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

முனைவர் க.கலா துணைவேந்தர், அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம், கொடைக்கானல். அணிந்துரை : சரியான சாட்டையடி "மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா!' என்னும் கவிமணியின் வாக்கிற்கிணங்க இப்பூவுலகில் அவதரித்த, பெண்மணிகள் யாவருமே மாதவம் செய்தவர்கள். அந்த வரிசையில் நமது நூலாசிரியர் "வினிதா மோகனும்' ஒருவர். இல்லறத்தைப் பேணுதலோடு தன் கடமையை நிறுத்திக் கொள்ளாது, படைப்புலகிலும் தடம் பதிக்க வேண்டும் என்னும் முனைப்போடு புறப்பட்டிருக்கும் அன்பு மகள் வினிதா மோகனுக்கு "படைப்புலகில் முத்திரை படைக்க, சித்திரைப் பெண்ணிற்கு சீர்மிகு சித்திரை வாழ்த்துகள்" ஒரு சிறந்த படைப்பென்பது படைப்பாளனின் ஆளுமையைப் பறைசாற்றும். அப்படைப்பானது சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என எந்தப் பரிணாமத்திலும் இருக்கலாம். அப்படிப்பட்ட அப்படைப்பானது, படைப்பாசிரியரின் முழு ஆளுமைத்தன்மையோடு மிளிரும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அந்த வகையில் "வினிதா மோகனின்" சிறுகதை நூலான இத்தொகுப்பில் 15 கதைகளையுமே சீரிய சிந்தனையோடு படைத்துள்ளார். அனைத்துக் கதைகளுமே நமது நிகழ்காலத்தை நம் நெற்றிப்பொட்டில் அறையும் வண்ணம் எடுத்தியம்பியுள்ள விதமும், கதைத் தேர்வும் இச்சிறுகதை நூலுக்கு மேலும் அணி சேர்க்கின்றன. எதார்த்தமாகக் கதைப் பின்னலை அமைத்து, தான் சொல்ல வந்த விடயத்தைத் தெளிவாக எடுத்துரைக்கும் பாங்கும். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழகும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கு உரியது. முதல் கதையான "பகுத்தறிவின் சிறப்பு" என்பதில் நம் அன்றாட வாழ்வில் நடக்கும், காலம் காலமாக ஊறிப்போன சமூக நிகழ்வைப் பகுத்தறிவுக் கண்ணோட்டத்துடன் நோக்கும் விதமாக அமைத்தது கதையின் சிறப்பம்சம் ஆகும். சமூகத்தில் மனிதர்களின் மூடநம்பிக்கைகளும் அதைப் பின்பற்றும் படித்தவர்களும் நிறைந்த இந்த உலகில் "நறுமுகை" கதாபாத்திரத்தின் வாயிலாக நூலாசிரியர் செய்தது சமூக, சமுதாயப் புரட்சி. குழந்தை பிறந்தால் தீட்டு பூப்பெய்தால் தீட்டு, இறந்த வீட்டில் தீட்டு என நம் சமூகத்தில் படித்த மக்களும் பின்பற்றும் மூடப்பழக்க வழக்கங்களுக்குச் சரியான சாட்டையடி இக்கதைக்கருவாகும். "அகத்தினியனின் அகம்" எனும் மனம்சார் உளவியல் ரீதியான சிறுகதையும் மாறுபட்ட கோணத்தில் படிப்போரை உயரிய சிந்தனைக்கு இட்டுச் செல்லுகிறது. "அர்த்தநாரீஸ்வரி" கதையில் நட்பின் புரிதலும் அழகும் வெளிப்படும் விதத்தில் நூலாசிரியர் பரிமளிக்கிறார். பயன்தூக்கார்" என்னும் கொரோனா நோய் தொடர்பான மனிதம் போற்றும் சிறுகதையும் "மயூரன்" எனும் கதாப்பாத்திரத்தின் வழியாகவும், "மனம் ஒரு கோவில்" என்னும் சிறுகதையிலும் "முகுந்தன்" என்னும் கதாபாத்திரத்தின் வழியாகவும், நூலாசிரியர் தன் மனக் கருத்தை முன்வைத்திருப்பதும் இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு. இங்ஙனம் "கேள்வியே வேள்வியாய்", "திருமுகம் என்றால்", "இதயகர்ஜனை 'எனக் கதைகள் அனைத்திலுமே தனது நேர்மையான சிந்தனைகளை, சமூகம் தொடர்பான தன் ஆதங்கங்களைக் கருத்துகளாகத் தொடுத்து நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ள வினிதா மோகனின் எழுத்தாற்றல், பாராட்டுதலுக்கும் வரவேற்புக்கும் உரியது. சம கால சிறுகதை எழுத்தாளர்களைப் போல 'காதல், காமம்' எனப் பயணப்படாமல் ஒவ்வொரு கதையையும் கருங்கல்லை உளி கொண்டு செதுக்கி சிற்பமாக்கும் சிற்பியின் முயற்சியையும் உழைப்பையும் கொண்டு சிறப்பாக வடிவமைத்திருக்கிறார், செதுக்கியிருக்கிறார். "கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப் போக", என்னும் வள்ளலாரின் கூற்றுப்படி இச்சமூகத்தில் கண்களை மூடிக் கொண்டிருக்கும் பழக்கமும் போகட்டும். கண்களைத் திறந்தால் மட்டுமே காட்சி கிடைக்கும். அதுவே அகப்புற வளர்ச்சிக்கு வித்திடும். வள்ளல் பெருமானின் அடியொற்றில், இத்தகைய சமூகம் சார்ந்த ஆர்வலர்கள் எழுத்தாளர்களாக வலம் வந்தால் இன்றைய இளைஞர்களுக்கும், சமூகத்தில் உள்ள பலதரப்பட்ட மக்களுக்கும் சரியான பாதையைக் காட்டுவார்கள் என்பது திண்ணம். பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக ஜொலிக்கும் பதினைந்து சமூகம் சார் சிறுகதைகளைப் படைத்த அன்பு மகள் வினிதா மோகனுக்கு என் இதயக்கமலத்திலிருந்து வாழ்த்துப் பூக்களைத் தூவுகிறேன். தமிழ்கூறும் நல் உலகம் இவரின் எழுத்தாற்றலை சிறப்பிக்கும். வாழ்க வளமுடன் நலமுடன்!! என்றும் அன்புடன், முனைவர் க.கலா துணைவேந்தர் VICE CHANCELLOR Mother Teresa Women's University Kodaikanal

வினிதா மோகன்

"கர்ஜனை‌" நூல் பற்றி கவிஞர் ஜோ மல்லூரி காலத்தை மொழிபெயர்த்த கலைமகள்! வினிதா மோகன்! கனமழையைத் தாங்கிய குடையைப் போல. கனமான கதைகளைத் தாங்கிய மனஇழையோடு தமிழ் இலக்கியப் பரப்புக்கு - ஒரு தாக நதியாய் தாளகதி தப்பாத வேகத்தோடும் மோகத்தோடும் வந்து சேர்ந்திருக்கிறார் வினிதா மோகன்! அதிர்ந்து பேசாத ஆனந்த ராகத்தோடு நேரில் வார்த்தையாடும் வினிதா மோகன் - தனது கதைகளில் வாயிலாக நிறைய அதிர்வுகளோடு வந்திருக்கிறார். தனது முந்தானையில் முடிந்து வைத்திருக்கும் கதைகள் அல்ல இவை! ஆரூடம் கணிக்கிற குடுகுடுப்பைச் சத்தம் அல்ல! இந்தக் கதைகள்! மங்கல் வானத்து ஊமைக் கனவாய் - உதறப்பட்ட மானுடத்தின் விளிம்பு நிலை மாந்தர்களின் மன ஓட்டத்தை அவர்களின் வாழ்வியலை வடித்தெடுப்பது அவ்வளவு எளிதானதல்ல! அது ஒரு அரிதான அகழ்வு! 15 சிறுகதைகளை உள்ளடக்கிய இந்தப் படைப்பு காலத்தை வெல்லுகின்ற வாய்மையோடும் அதைவிட, நிச்சயமாக மானுடத்தை ஒரு புதிய விடியலுக்கு அழைத்துச் செல்கிற வீரியத்தோடு இருப்பதைக் காலம் சொல்லும். அன்றாடம் நம்மைச் சூழ்ந்து எத்தனையோ நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. எதைப் பதிவு செய்வது என்பதே ஓர் அறிவுதான். வினிதா மோகன் தனது கூர்மையான பார்வையை தீர்க்கமான சிந்தனையோடு கதையாக்கி இருக்கிறார். அடர்த்தியான ஒரு மரநிழலில் தோழியோடு அமர்ந்து மனதைப் பரிமாறும் மகத்துவமான தருணத்தைப் போல, இந்தக் கதைகள் நம்மை ஈர்த்து நிற்கிறது. மனதில் வேர்த்து நிற்கிறது. வினிதா மோகன் எந்தக் கதையையும் நம் மனதுக்குள் திணிக்க முயற்சிக்கவில்லை! தூக்கணாங்குருவி கூடுகட்டுவதற்கு எவ்வளவு கவனக் காப்போடு குச்சிகளைப் பொறுக்கி வருகிறதோ, அத்தகைய இயல்புச் சிரத்தையோடு தனது கதைகளைக் களத்தில் இறக்கி வைத்திருக்கிறார். பெரும்பாலும் பெண்ணியப் படைப்பாளிகள் என்றாலே கண்ணீரும், கம்பலையுமான ஒப்பாரிக்குரல் ஒலிக்கும் என்கிற வரம்புகளை மீறி, எதைச் சமுகத்திற்கு பந்தி வைக்க வேண்டுமோ, 'அதை அளவுமீறாமல் தருவதில் அலாதிப் பிரியம் காட்டி, வெற்றி பெற்றிருக்கிறார். அர்த்தநாரீஸ்வரி கதையில் 'உணர்வுகளே நட்பின் ஆழத்தை ஓசையின்றி அழகாக்குகின்றன' என்கிற கவித்துவத்தோடு இழையோடி இருப்பதில், வினிதா மோகனின் விலாசம் தெரிகிறது. ஒரு பூவுக்குரிய மௌனமான பார்வையும் ஒரு பறவையின் கண்களில் இருக்கிற ஆகாய அளவும் - அலைகள் இல்லாத ஒரு நீரோடையின் நிதானமும் மொத்தக் கதைக்களத்தையே அழகாக்கி ஆரோகணம் செய்கின்றன. வினிதா மோகன் தனது எழுதுகோலால் மானுடத்திற்கான ஒரு புதிய இரத்த ஓட்டத்தை உருவாக்கி இருக்கிறார். ஒரு நீராழி மண்டபத் தின் ஈ.ரவாடையில் இதயம் நனையக் கதையாடி இருக்கிறார். பெருமளவு வார்த்தைகளை விரயமாக்காமல் கனப்படுத்தி இருக்கிறார். தானியங்களோடு தங்கத்துண்டுகளே கிடந்தாலும், பறவைகள் தங்களது தண்டுக் கால்களால், தங்கத் துண்டுகளைத் தட்டிவிட்டு, தானியங்களைத்தான் கொத்தித் தின்னும். அதைப்போல, வினிதா மோகன் தனது எழுதுகோலால், பருவக் கதைகளை எழுதிப் புகழ்பெற விரும்பாமல், மானுட உறவுகளைத் தூக்கி நிறுத்தும் தூய பணிக்கு தன்னைத் தத்தம் செய்திருக்கிறார். 15 கதைகளும் விதை நெல்லாக இருக்கிறது. மானுட நேயத்திற்கான மகசூலைக் காலம் அறுவடை செய்யும் என்பது திண்ணம். தமிழ் கூறும் நல்லுலகம் - வினிதா மோகன் என்கிற அருந்தமிழ் மகளை ஆரத்தி எடுத்து வரவேற்கும். இவரது சிந்தனையில் உதித்துள்ள இந்தச் சீர்வரிசைக்கு சமூகம் சாமரம் வீசட்டும். கழுகின் உயரத்திற்கு இவரது கதைகள் உயரட்டும். இவரை வாழ்த்தும் வரிசையில் தமிழன்னைக்கு அருகில் நானும் நிற்கிறேன். ஜோ மல்லூரி கவிஞர் நடிகர்

வினிதா மோகன்

பகுத்தறிவும். கற்பனையுமே மனிதனை விலங்கிலிருந்து வேறுபடுத்துகின்ற சிறப்புக் குணங்கள். நாள்தோறும் வளர்ந்துகொண்டே இருப்பதுதான் அறிவு. யாரால் சொல்லப்பட்டாலும் அதன் மெய்ப்பொருள் காணும் திறனையே அறிவு என்கிறோம். பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு வந்த பின் தீட்டென்று குளிப்பது பழைய நம்பிக்கை. குழந்தையைப் பார்க்கவே குளித்துவிட்டுச் செல்வதே அறிவான செயலென அறிவுறுத்தித் துவங்குகின்றன வினிதா மோகனின் கதைகள். வளரிளம் பருவத்தின் பால் சார்ந்த உந்துதல்கள். அதன் தப்பிதங்கள், எதிர் பாலினம் மீதான வெறுப்புகள், பயங்கள் இவைகள் ஏற்படுத்தும் வாழ்கைப்போக்கு மாற்றங்கள் பற்றிய அகத்தினியனின் கதை. இரு நடுவயதினரிடையேயான முதிர்ந்த உரையாடலாக அமைந்துள்ள விதம் சிறப்பு. மானுடரின் அடிப்படை இச்சையான பாலியல் விருப்புகளைப் பதின்ம வயதினர் எதிர்கொள்வது எப்படி என்றும். அதை உன்னதப்படுத்தி உயர்நோக்கச் செயல்களாக்கிக் கொள்வது எப்படி என்றும் அருமையாகக் கூறும் கதை பாடநூலில் இடம் பிடிக்கும் தரம் உடையது. தம்மிடையே உள்ள திறன் குறைந்தவர்களையும். குறைபாடுகள் கொண்டவர்களையும், ஒரு சமூகம் நன்றாக நடத்தும் விதமே அச்சமூகத்தின் மேப்பட்ட தரத்தின் ஒரு குறியீடு. அர்த்தநாரீஸ்வரியின் அக்கறை. அர்த்தநாரிகள் மீதான நூலாசிரியரின் கவனம் போற்றுதற்குறியது. நம் கோவில்களில் சுத்தம் குறைந்த நிலையைக் கண்ணுரும் வினிதா மோகனின் அழகுணர்வு பதற்றம் கொள்கிறது. நம் மரபை மறுக்காமல் அதைக் காலத்திற்கேற்ப நவீனப்படுத்தும். தூய்மை வேண்டும் உந்துதலை நமக்கு மடைமாற்றம் செய்யும் நூலாசிரியரின் அழகு மனம் ஒரு கோவில்தான். கொரோனா காலகட்டத்தை நம் சமூகம் எதிர்கொண்ட விதத்தை. அந்நோய் பற்றிய நுண் விவரங்களை, சிகிச்கை முறைகளை. புள்ளி விவரங்களை வராலற்றில் பதிவு செய்து வைக்கிறார் நூலாசிரியர் தன் மூன்று கதைகள் மூலமாகச் சேவையில் இன்புறுகிறார். பிறர் பசிப்பிணி நீக்குவதில் களிப்படைகிறான் இளைஞன் ஒருவன். தன் அறிவைப் பயன்படுத்திச் சுரண்டாமல், எளிய மனிதர்கள் மீது அன்பும். அக்கறையும் கொள்கிறான் அவன். தன் தாத்தாவின் சொற்களை மனதில் கொண்டு. சேவை மையம் துவக்கி, அதற்காக விருதுகள் பெறும் அந்த மானுட நேசம் கொண்டவனின் கதையைப் படித்து என் அகம் மகிழ்ந்தது. கொரோனா முதல் அலை துவங்கும்போதே நோய்த் தொற்று ஏற்பட்ட இளம் செவிலி மகிழ்வெண்பா, தன் ஏழ்மைக் கவலை. திருமணக் கவலை. நோயின் சிரமங்கள் ஆகியவற்றை திறனுடன் எதிர்கொண்டு ஆனந்தமாய் டிக்டாக்கில் பதிவுகள் போடுகிறாள். மகிழ்ச்சி என்பது சூழல் சார்ந்தது அல்ல அவரவர் மனநிலை சார்ந்தது என்று அவள் மூலமாக அறிவிக்கிறார் நூலாசிரியர். கொரோனாவில் தன் தந்தை இறந்து விடுகிறார். இறுதிச் சடங்குகளை நிறைவாகச் செய்ய இயலாத சமூகச்சூழல் அவளுக்கு வருத்தம் தருகிறது ஆயினும் தன் தந்தையின் கனவுகளுக்கு உயிர் கொடுப்பதுதான் அவருக்குத் தான் செய்கிற சிறப்பான இறுதி மரியாதை என உணரும் மகள் அவர் எழுதிவைத்துச் சென்ற நூல்களைப் பதிப்பித்து நிறைவடைகிறார். படிக்கும் எம் வாசக உள்ளமும் நிறைகிறது. சாதி அடுக்குகள் மீதான தன் கோபத்தை இரு கதைகள் மூலம் பறைசாற்றுகிறார் நூலாசிரியர் வினிதாமோகன். கொங்கு வேளாளர் திருமணவிழா. எழுதிங்கள் சீர்விழா பற்றிய நுண்விவரணைகளுடன் செல்கிறது முதல் கதை. தர்க்கமனம் கொண்ட யாழினி. கேள்விகளாய்க் கேட்க மரபின் முகமாய் நின்று அருமையாய்ப் பதிலுரைக்கிறார் அருமைக்காரர் பெரியப்பா. தொல்காப்பியத்தில் கற்பியல் மேற்கோள்களைக் காட்டி. ஈரோட்டறிஞர். கல்வெட்டு ஆய்வாளர் செ. ராசு அவர்களின் நூலாதாரங்களைக் கொண்டு. சீருடன் வாழவே நம் சீர்கள் என்று விளக்குகிற பொன்னுசாமி பெரியப்பாவுக்கு எம் வணக்கங்கள் உரித்தாகுக. ஆயினும் கூட இந்த சாதிசார்ந்த சடங்குகள். சாதிக்கொரு நீதியென நிலைநாட்டுகிற நோய்க்கூறுகளாக உள்ளனவே சரிதானா? என யாழினியாய் மனச்சோர்வும் கொள்கிறார் நூலாசிரியர். பெண்களைச் சமையலறைக்குள் ஒடுக்குவதையும். தலித்துகளைச் சேரிக்குள் ஒடுக்குவதையும் ஒப்பிட்டு அடுக்குமுறை அதிகாரங்களைச் சாடுகிறார் வினிதா மோகன். சாதிமதமில்லாதவர் என்று எல்லோரும் பெருமையுடன் சான்றிதழ் கோர வேண்டும் என்கிற அவரின் கனவு மெய்ப்படுக. சூழலியல் சார்ந்த, இயற்கையைப் பேணுகிற வாழ்வு வேண்டும் என்று நெறியுறுத்தும் கதையில் காடு ஆள்பவனுக்கு குவரன் என்று பெயர் சூட்டியது சிறப்பு. மழை வடிவில் இறைத்தூதனைக் காணும் ஒப்புமை அழகு. கானகத்துப் பறவைகளின் சுருதியும். லயமும் நம் காதுகளுக்குள் ரீங்காரமிடச் செய்கின்றன நூலாசிரியரின் வர்ணனைகள். காலமாற்றத்தில். இயற்கையின் நேசன்களை நாம் புத்தி பேதலிக்கச் செய்து விடுகிறோமே கடவுளே!!!. மரணித்த முல்லைநாதனைப் பார்க்கும்போது செந்தூரனுடன் சேர்ந்து நமக்கும் கண்கள் கலங்கிவிடுகின்றன. பூப்படைவதைக் கொண்டாடும் ருதுமங்களச்சீர் கதையிலும் அந்த நிகழ்வு பற்றிய வர்ணனைகளைப் பாங்குடன் பதிவு செய்கிறார் நூலாசிரியர். தெரட்டி. மனை. குடிசை கட்டுதல் போன்ற வட்டார வழக்குச் சொல்லாடல்கள் சிறப்பு. தாய்மாமனின் உரிமைகள், கன்னித்தீட்டு போன்ற விவரணைகளைச் சொல்பவர். இந்தச்சடங்கு தேவைதானா? என்று உரக்கக் குரலெழுப்புகிறார். பெண்களின் சமத்துவம், சுதந்திரம் போன்றவை இன்னும் பேச்சளவிலேயே உள்ளன என்றும், செயல்பாட்டுக்கு வரும் நாளை எதிர்நோக்கிய கனவுடனும் கதையை நிறைவு செய்கிறார் வினிதா மோகன். இளையோர்களின் கைப்பிடித்து நூலகத்திற்குள் அழைத்துச்சென்று வாசிப்பின் இன்பத்தைப் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்கக் கோருகிற கதையும் மனம் கவர்கிறது. நம்மை அறிவுள்ளோராக. பண்பட்ட மனிதர்களாக மாற்றும் ஒரு அதிசயம் புத்தங்களுக்குள் ஒளிந்துள்ளது என இளவல்களுக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர். அறிவே அற்றம் காக்கும் கருவி என்ற நம் வள்ளுவப் பேராசானின் குறளை. நூலெங்கும் எதிரொலிக்கிறார் வினிதா மோகன். சமூகமாக. சுமூகமாக வாழ மனிதர்கள் கண்டுபிடித்த மிகத் திறன் வாய்ந்த கருவி அறம் தான் என்பார் என் அன்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன். கருணை, அறம். நேர்மை, இரக்கம். நீதியுணர்வு என நாம் சொல்வன அனைத்துமே மனிதனின் அடிப்படை இயல்புகளான தன்னலம். காமம். மூர்க்க குணங்களுக்கு எதிரானவை. ஆகவே அறம் சார்ந்த செய்திகள் சான்றோர்களாலும், நூலாசிரியர்களாலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படவேண்டிய தேவை இங்கு அதிகம் உள்ளது. பேரிலக்கியங்கள் அனைத்தும் அறப்பிரச்சார ஆக்கங்களே. அந்த வரிசையின் தொடர்ச்சியே என வினிதா மோகனின் கதைகள் என்ற இப்புனைவு நூலைக் கொள்ளலாம். காந்தியடிகள் பற்றிய, அம்பேத்கர் பற்றிய விவாதங்களைத் துவக்கி வைத்து அவர்கள் எழுதிய நூல்கள் மற்றும் அவர்களைப் பற்றிய தொடர் வாசிப்புகளுக்கும் வழிகாட்டுகிறார் வினிதா மோகன். I.A.S.,I.T.S., T.N.P.SC தேர்வுகள் பற்றிய செய்திகளும். Black Chain Technology போன்ற நவீன தகவல்களும், இளம்தலைமுறையினரின் தேடலுக்கான தூண்டுதல்களாக நிச்சயம் அமையும். கரூரின் காவிரியைப் போல, தெளிவாக மென்நடையில் சொல்லுமிடமெல்லாம் செழிப்பாக்கிக்கொண்டே செல்லுகிற, தன் கதைகள் சொல்லும் திறன் மூலம். மனம் கவர்கிறார் இந்நூலாசிரியர் வினிதாமோகன். நூல்பல காண்க என்று நட்புடன் வாழ்த்துகிறேன். மருத்துவர் க. கண்ணன் கபிலா மருத்துவமனை, கரூர்.


சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் தமக்குத்தாமே உருவமும் உயரமும் கொடுத்து சிகரம் தொட்ட சாதனைப் பெண்களின் வரலாறு! சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்காக சாதித்து உயர்ந்த சகோதரி வினிதா மோகன் அருமையான மொழிநடையில் இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் தன்னம்பிக்கை விருந்து படைத்துள்ளார். ஃபீனிக்ஸ் பெண்கள் அவருடைய முதல் புத்தகம் என்பதை நம்ப மறுக்கிறது மனம். வியாபாரம், குடும்பம், சமூக சேவை ஆகிய மூன்று துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்த சகோதரி வினிதா தற்பொழுது தனது முதல் புத்தகத்திலேயே எழுத்துத் துறையிலும் தனக்கான சிறப்பிடத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். சாதிக்கத் துடிக்கும் ஆண் பெண் ஒவ்வொருவரின் கையிலும் இப்புத்தகம் தவழ வாழ்த்துக்கள். முனைவர் சொ.ராமசுப்ரமணியன் (முதன்மை முதல்வர், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்கள்) மேனாள் உறுப்பினர், தேசிய ஆட்சி மொழி ஆலோசனைக் குழு, இந்திய அரசு - பாதுகாப்பு அமைச்சகம், புது தில்லி.

05.07.2021 எழுத்தாளர் #ஆண்டாள்பிரியதர்ஷினி, அவர்களின் "#பீனிக்ஸ்பெண்கள்" நூல் பற்றிய மதிப்புரை: சாம்பலின் உயிர் வாசனை அவளின் இருப்பு - பெரும்பாலும் வரலாற்றின் பக்கங்களில் பதிவு வைக்கப் படுவதில்லை. பிரபஞ்சத்தை நிறைத்திருக்கும் காற்றில் அவளுக்கும் பங்கு இருக்கிறது என்பது உணரப்படுவதில்லை. வரலாறு என்னும் “HISTORY” எப்போதும் “HIS STORY” என்று மட்டும் உருவகிக்கப்படுகிறது. இவை எல்லாவற்றையும் மீள்பார்வை செய்யவும் , அவளின் இருப்புக்குக் கட்டியம் கூறவும், வரலாறு என்பதை “HES STORY” என்றாக்கவும் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறார் கரூர் வினிதா மோகன் “பீனிக்ஸ் பெண்கள்” என்னும் படைப்பின் வாயிலாக. கீழே விழுந்தாலும், இழந்தாலும் எழுந்து நிற்க வேண்டும் . அதுதான் வாழ்க்கையின் அடையாளம். வாழ்தலின் அடையாளம். மூக்கு விடும் மூச்சு மட்டுமல்ல அடையாளம் என்பதை 175 பக்கங்களின் ஆயிரக் கணக்கான வார்த்தைகளில் பதிவு செய்திருக்கிறார் வினிதா மோகன். பீனிக்ஸ் என்பது லட்சியத்தின் குறியீடு. சூரியனைத் தொட்டுவிட வேண்டும் என்பதைப் பறத்தலின் இலக்காகக் கொண்டது பீனிக்ஸ். சூரியனின் கொதிநிலை உயிரைப் பொசுக்கும் என்றாலும் சூரியனைத் தன் சிறகுகளுக்குள் பொதிந்து கொள்ள வேண்டும். சூரியனின் உச்சியில் தான் சென்று அமரவேண்டும் என்பதான இலக்குகள் கொண்ட பீனிக்ஸ் சூரிய நெருப்பில் கருகி ,உருகி ,பொசிந்து சாம்பலானாலும் - சாம்பலின் கருவறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுகிறது. இது பறவையின் இயல்பும் , கதையும் மட்டுமா? பீனிக்ஸின் படிமத்தில் பெண்ணை இருத்திவைத்தால் அவளுக்கும் முற்றமுழுக்கப் பொருத்தப்பாடு கொண்டதுதானே..? இந்த வாழ்க்கையின் உயிர்ப்பை இப்படியாக நிலைநிறுத்திக் கொண்ட இருபது பீனிக்ஸ் பெண்கள் அல்லது பெண் பீனிக்ஸ்களின் ராஜபாட்டை தான் இந்த நூல் . ராஜபாட்டை என்பதால் சிவப்புக் கம்பளத்தில் நடந்து சென்று சிம்மாசனத்தில் உட்கார்ந்தது எப்படி என்று தேவதைக் கதையைச் சொல்லவில்லை படைப்பாளர் வினிதா மோகன். வாழ்க்கை முழுக்க முள்பாதைகள் பயணம். நிராகரிப்புகள் . மறுப்புகள் . தோல்விகள் . வழியெல்லாம் வலிகள் . முட்டுச்சந்துகள் . ஓரடி நகர்ந்தால் ,ஈரடி வழுக்கும் சேற்று நிலங்கள் . தகிப்புகள் . தவிர்ப்புகள் . துடிப்புகள் . வெடிப்புகள் . உராய்வுகள் . சிராய்ப்புகள் . குருதிகள் . காயங்கள் . பிரிவுகள் . உறவு முறிவுகள் . இவற்றால் கட்டமைக்கப்பட்ட பொழுதுகளே இந்தப் பெண்களின் வாழ்க்கை என்று பெயர் பெறுகிறது . ஆனால் ஊழையும் உப்பக்கம் காண்கிறார்கள் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்களாகி, இத்தனை நெருப்புப் பள்ளத்தாக்குகளையும் உலைவின்றித் தாழாது உஞற்றுபவர்களாகி இத்தனை நெருப்புப் பள்ளத்தாக்குகளையும் ஒவ்வொரு நொடியாகத் தாண்டித் தாண்டி விஸ்வரூபம் எடுக்கிறார்கள். இந்த எரிமலைக் கதைகளை நெருப்பின் தகிப்பு குறையாமலும் , சாதனையின் துடிப்பு மறையாமலும் சொல்லியிருப்பது வினிதா மோகன் சாதனை. உலகளாவிய பூகோளப்பரப்பின் பெண்களை , நம் மனசுக்கு நெருக்கமான மொழியில் சொல்லுவது படைப்பாளருக்கு வாய்த்திருப்பது - வினிதா மோகன் மொழி ஆளுமைக்குச் சான்று. நூலின் ஒவ்வொரு வார்த்தையும் தீப்பந்தம் சுமக்கிறது. புகாரையும் , புலம்பலையும் , சோம்பலையும் பொசுக்கி எரித்து , அந்தச் சாம்பலின் பூவாகப் பெண்கள் ஆளுமைகளாக விஸ்வரூபிக்க வேண்டும் . இந்த நூலை வாசித்த யாருமே தோற்று விட முடியாது . வெற்றிக்கான மந்திரக்கோலை நூலாக்கித் தந்திருக்கிறார் நூலாசிரியர். கட்டுரைகளாகப் பக்கங்களை நிரப்பாமல் , புகைப்படங்களையும் இணைத்து பெண் வரலாற்றின் பக்கங்களை நிறைவு செய்திருக்கும் பதிப்பகத்தாருக்கும் வாழ்த்துகள். எழிலினி பதிப்பகம் மகளிர் எழுத்துக்கு மணிமகுடம் சூட்டுவதில் முனைந்து செயலாற்றுகிறது. அந்த மணிமகுடத்தின் நவரத்தின ஜொலிப்பு வினிதா மோகனின் பீனிக்ஸ் பெண்கள் . இன்னும் இன்னும் வெல்க..! எப்போதும் அட்சதைகளுடன் .... #ஆண்டாள்பிரியதர்ஷினி, எழுத்தாளர்.
10.08.2021 திருமதி. #சித்ராதேவிவேலுசாமி, சென்னை அவர்களிடமிருந்து "#பீனிக்ஸ்பெண்கள்" நூல் விமர்சனம். பீனீக்ஸ் பெண்கள்-வினிதா மோகன் தலைப்பு தமிழ் எழுத்துக்களை அழகு படுத்தி இருக்கிறது. எழுத்தும், தலைப்பும் அருமை. முகப்புப்படம்: தலைப்புக் கேற்றது வண்ணங்கள் மெருகு சேர்க்கிறது. பதிப்பகம்: கூடுதல் சிறப்புச் சமர்ப்பணம்-எழுத்துக்கள் வசீகரம்... பதிப்புரை,அணிந்துரை,வாழ்த்துரை,முன்னுரை நுகர்ந்து நூலின் உள்ளே... ஒரு பெண், ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவருவது சாதாரணமான காரியமா?? எவ்வளவு அவமானங்களை, இன்னல்களை, கடந்து வரவேண்டியுள்ளது. அன்றல்ல இன்றும் தான். பலவகைப்பட்ட சிகரம் தொட்ட மாந்தர்கள் 20 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எப்படி தங்களது சிறை கூட்டை உடைத்து ,தகர்த்து, தங்களது இடத்தை தக்கவைக்க, பல வேதனைகளையும், தடைகளையும், சிக்கல்களையும், தாண்டி வந்தார்கள்... என்பதை எழுதி இருக்கிறார் வினிதா மோகன் அவர்கள்... ஒவ்வொரு தலைப்பிலும் ஆரம்பம், மிகச்சிறந்த மேற்கோள்களுடனும் முடிவு தன்னம்பிக்கை வரிகளை உடையதாய்... அமைத்த விதம், அருமை. பொதுவாக இந்த 'பீனிக்ஸ் பெண்கள்' புத்தகம் இந்த 20 பெண்கள் எதிர்நோக்கிய சவால்களை எப்படி எதிர்கொண்டு சமாளித்தார்கள்?! என்பதை அறியவும், அவர்களது போராட்டங்கள், உறுதி, வைராக்கியம் நமக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
10.08.2021 திருமதி. #சித்ராதேவிவேலுசாமி, சென்னை அவர்களிடமிருந்து "#பீனிக்ஸ்பெண்கள்" நூல் விமர்சனம். பீனீக்ஸ் பெண்கள்-வினிதா மோகன் தலைப்பு தமிழ் எழுத்துக்களை அழகு படுத்தி இருக்கிறது. எழுத்தும், தலைப்பும் அருமை. முகப்புப்படம்: தலைப்புக் கேற்றது வண்ணங்கள் மெருகு சேர்க்கிறது. பதிப்பகம்: கூடுதல் சிறப்புச் சமர்ப்பணம்-எழுத்துக்கள் வசீகரம்... பதிப்புரை,அணிந்துரை,வாழ்த்துரை,முன்னுரை நுகர்ந்து நூலின் உள்ளே... ஒரு பெண், ஒரு கூட்டை உடைத்துக் கொண்டு வெளிவருவது சாதாரணமான காரியமா?? எவ்வளவு அவமானங்களை, இன்னல்களை, கடந்து வரவேண்டியுள்ளது. அன்றல்ல இன்றும் தான். பலவகைப்பட்ட சிகரம் தொட்ட மாந்தர்கள் 20 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எப்படி தங்களது சிறை கூட்டை உடைத்து ,தகர்த்து, தங்களது இடத்தை தக்கவைக்க, பல வேதனைகளையும், தடைகளையும், சிக்கல்களையும், தாண்டி வந்தார்கள்... என்பதை எழுதி இருக்கிறார் வினிதா மோகன் அவர்கள்... ஒவ்வொரு தலைப்பிலும் ஆரம்பம், மிகச்சிறந்த மேற்கோள்களுடனும் முடிவு தன்னம்பிக்கை வரிகளை உடையதாய்... அமைத்த விதம், அருமை. பொதுவாக இந்த 'பீனிக்ஸ் பெண்கள்' புத்தகம் இந்த 20 பெண்கள் எதிர்நோக்கிய சவால்களை எப்படி எதிர்கொண்டு சமாளித்தார்கள்?! என்பதை அறியவும், அவர்களது போராட்டங்கள், உறுதி, வைராக்கியம் நமக்கு வழிகாட்டுவதாகவும் அமைந்துள்ளது.
28.07.2021 முனைவர் வா.நேரு, தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், மதுரை. அவர்கள் அளித்துள்ள "#பீனிக்ஸ்பெண்கள்" நூல் விமர்சனம். தனது முதல் ஆட்டத்திலேயே சதமடித்த கிரிக்கெட் வீரர் போல, தனது முதல் படைப்பையே முத்தான படைப்பாக, "பீனிக்ஸ் பெண்கள் ' என்னும் தலைப்பில் எழுத்தாளர் வினிதா மோகன் கொடுத்திருக்கிறார். பீனிக்ஸ் பெண்கள் என்னும் இந்த நூல் ,20 பெண்களின் சாதனை வரலாறு.அந்த 20 பெண்கள், உலகத்தின் பல பகுதியைச் சார்ந்தவர்கள். அவர்கள் தங்கள் செயலால், மேன்மை மிக்க நோக்கத்திற்கான போராட்டத்தால், தனித்துவமான எழுத்தால், விண்ணில் பறந்த சாதனையால், சோதனைகளைத் தாண்டி மீண்டும் எழுந்ததால் அவர்கள் 'பீனிகஸ் பெண்கள்'. வினிதா மோகன், பீனிக்ஸ் பெண்களாக எழுந்த பெண்களின் சாதனைக்கு முந்தைய துன்பங்களைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார். 65 சதவிகிதத் தீப்புண்கள் அடைந்த உடம்போடு, குணமடைந்து மீண்டும் உயிர்ப்பாய், துடிப்பாய் ஒரு பெண் இயங்கமுடியுமா?.. முடியும்! என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் 'துரியா பிட்' வியப்பைத் தருகின்றார்.துரியா பிட்டின் வாழ்க்கை வரலாற்றை,உணர்ச்சி ததும்பும் தனது விவரிப்புச்சொற்களால் வாசிப்பவரின் மனதிற்குள் புகுத்தி விடுகிறார் வினிதா மோகன். அமெரிக்காவின் கறுப்பு நிறத்துப்பெண்,பேருந்தில் வெள்ளை நிறத்து ஆட்கள் உட்காருவதற்காக எழுந்திருக்கச்சொன்னபோது, எழுந்திருக்க மறுத்து, ஒரு எழுச்சிமிக்க போராட்டத்திற்கு வழி வகுத்த 'ரோசா லூயிஸ் பார்க்கஸ் 'சரியான ஒன்றை நீ செய்யும்போது அதைச்செய்வதற்கு நீ ஒருபோதும் பயப்படக்கூடாது ' என்று சொன்னதை,அவரின் சொற்படியே அவர் வாழ்ந்ததை நன்றாகவே கட்டுரையாக ஆக்கியுள்ளார் நூலாசிரியர். உலக அழகியாக உயர்ந்த திருநங்கை ,ஏஞ்சலா போன்ஸ் அந்த நிலைக்கு வருவதற்கு முன்பு எப்படியெல்லாம் துன்பப்பட்டார், ஆனால் அதனை எப்படித் தனது உழைப்பால்,மதி நுட்பத்தால் வசப்படுத்தினார் என்பதனை விவரித்து 'புதிய சமுதாயம் என்பது அனைத்துப்பாலினத்தவரும் சமமாக மதிக்கப்படுவதாகும்' என்று குறிப்பிட்டு அந்த நோக்கத்தை நோக்கி நம்மைச் சிந்திக்க வைக்கிறார்.இவை சில எடுத்துக்காட்டுகள்."வாழ்வில் உங்களுக்குச்சோர்வை நீக்கி,அறிவையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து ,துடித்து எழத்தூண்டும் ஒரு உற்சாக டானிக் ' என்று இந்த நூல் பற்றி முன்னுரையில் வினிதா மோகன் குறிப்பிடுகின்றார்.உண்மைதான்.'சிறப்பு மிக்க நூலினை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறோம் ' எனப் பதிப்புரையில் எழிலினி பதிப்பகத்தார் குறிப்பிட்டுள்ளனர்.ஆமாம்,சிறப்பான நூல்,சிந்தனையைத் தூண்டும் நூலே 'பீனிக்ஸ்பெண்கள்'. வாழ்த்துகளும், பாராட்டுகளும் நூலாசிரியர் வினிதா மோகன் அவர்களுக்கு. முனைவர் வா.நேரு அவர்களுக்கு நன்றிகள்.






வினிதா மோகன்

சாம்பலின் உயிர் வாசனை... தாயின் கருவறையில் உழன்று பூமியில் விழுந்த சிசுவின் உன்னதமான வாசனை...  உங்கள் கருத்துரை.... அன்னையின் இதமான அணைப்பில் புத்துயிர் பெற்று புதிதாய் பூமியை காண உள்ளது இந்நூல்..! உங்கள் ஆசிகளுடன் வினிதா மோகன். 











RID 3000's GML 2021



வினிதா மோகன்

சதாசிவ ப்ரஹ்மேந்திரர், இவர் அதிஷ்ட்டானத்தில் ஜனவரி 1 2019 அமர்ந்திருந்தேன். இந்த பாரத பூமியில் அவதரித்த எத்தனையோ மஹான்களின் ஒருவர். மானஸ சஞ்சரரே போன்ற கீர்த்தனைகளை இயற்றியவர்.‌ அவர் வாழ்க்கையைப் பற்றிய கற்பனையான புனைவு தான் இந்த நாவல் என்று எனக்கும் முன்பே தெரியாது‌ . வினிதா மோகனின் நூல் விமரிசனம் மிக அருமை. அஹம் ப்ரம்மாஸ்மி_ பற்றிக் கூறினார். அத்துவைதக் கருத்தின் அடிப்படையே அதுதான். நான் ப்ரம்மமாய் இருக்கிறேன் என்று பொருள். இதனையே அருணகிரிநாதர் ""எனது யானும் வேறாகி எவரும் யாரும் நானாகும் இதய பாவ னாதீதம் அருள்வாயே_ என்கிறார். மகான்களின் வாழ்க்கையை , நாவலாகப் புனைந்து கூறுதல் அரிது. அதைச் சுவை குன்றாமல் விமர்சனம் செய்தல் அதனினும் அரிது. பாலகுமாரன் என்ற ஞான சித்தனின் படைப்பை நன்கு விமர்சனம் செய்த வினிதா மோகன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். Mr. Sabharathinam

வினிதா மோகன்

வெகு அருமையான திறனாய்வு வினிதா... தனலட்சுமி அவர்கள் குறிப்பிட்டது மாதிரி critical analysis.. திரு.கோவி சேகர்,திரு சபாரத்தினம்,திரு.ஒளி வண்ணன் ஆகியோரின் கருத்து வெளிப்பாடு அருமை... Its true that all the participants including me enjoyed the session?????? Uma Maheshwari, வாருங்கள் படிப்போம் குழுவின் ஒருங்கிணைப்பாளர்.

வினிதா மோகன்

வினிதா, அருமையாக திறனாய்வு செய்தீர்கள் தோழி. முழுமையான படைப்பு. Lockdownல் இருப்பதால் இந்த புத்தகத்தை வாங்கிப் படிக்க முடியவில்லை. எல்லாம் சரியானதும், வாங்கி படிக்கிறேன். மாறுபட்ட கருத்துக்கள் தான் எனது முதன்மை தேடலாக அமையும். வள்ளலாருக்கு பாலிய திருமணம் ஆகவில்லை. அவர் உண்மைத்துறவி. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றவர். மீண்டும் வினிதா மகனுக்கு பாராட்டுக்கள். கோவி. சேகர், இதயத்திலிருந்து கவிதை தொகுப்பின் ஆசிரியர்.

வினிதா மோகன்

மிக அருமையாகவும் நேர்த்தியாகவும் கூர்மையாகவும் தன் ஆய்வுரையை வினிதா வழங்கினார். இது போன்ற கடினமான புத்தகங்களை படித்து உள்வாங்கி அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்வது என்பது எளிதானது அல்ல. அந்த வகையில் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டு. Olivannan, Emerald Publisher, Chennai.



Review note about Phoenix Penkal' book published today in Noolveli page # Chennai Tamil Hindu (சென்னை இந்து தமிழ்) 11.04.2020
Review note about Phoenix Penkal' book published today in Noolveli page # Chennai Tamil Hindu (சென்னை இந்து தமிழ்) 11.04.2020
One of the Prestigious Rotary Club in our RIDistrict 3000 Rotary Club of Tiruchirapalli and First All Women Rotary Club in our District 3000 RC of Tiruchirapalli Shakthi. They both jointly celebrate Women's day. I'm very glad to part of their Women's day programme. Its a great honour for new Author like me. And Happy to be a first female Author in our RID 3000 through this Phoenix Penkal Book. My sincere Thanks to each and every one of you who take part my journey.
Small recognition for Phoenix penkal book from #All India Radio #Air Rainbow 102.1 FM in Tiruchirappalli "#Mangayar Ulagam" (#Women's World ) live program.

வினிதா மோகன்

Now Phoenix Penkal book in Air...
Feminism என்ற சொல்லை பலவாறு மொழியாக்கம் செய்கின்றனர்.பெண்நிலை வாதம் என்றும் பெண்ணியம் என்றும் மனநிலைக்கு தகுந்தவாறு மொழிபெயர்ப்பு செய்கின்றனர். இங்கு வாதத்தை நகர்த்தி பெண்ணியத்தை கையில் எடுத்துள்ளார் எழுத்தாளர் வினிதா மோகன். ஆக்க செயல்கள் பலபுரிந்த மகளிரின் பிறப்பிலிருந்து அவர்கள் வாழ்க்கையில் சாதனை செய்து முன்னேறியதை அற்புதமான இறந்தகால, நிகழ்கால சாதனைப் பெண்களை வரிசைப் படுத்தியுள்ளார். பெண்ணாகப் பிறந்தாலே பெரும் பீழை என்ற பெருங்கவியின் வார்த்தையை போல ஒவ்வொரு பெண்ணும் துயரத்தை வென்று வேதனைகளை சாதனைகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளார் தம் எழுத்து திறமையுடன். மூடிய வண்டியுள் சென்று ஆண்களுடன் சேர்ந்து படித்த முத்துலட்சுமி அம்மையார் நூறாண்டு முன்பு படித்த மருத்துவ சாதனையும் , ஸ்ரீ தர்மா பத்திரிக்கை நடத்தியதும் அரசியலில் முதல் பெண் சட்டசபை உறுப்பினர் ஆனதும் பெண் சமுதாயத்தின் முன்னோடியாகத் பாடுபட்டதும் விவரித்த விதம் மிகத் தெளிவு. ஹாரி பாட்டர் எழுதிய ஜெ கே ரவுலிங் பற்றி சோகம் பிழியப் பிழிய வாழும் ஒருவர் வெற்றி பெற்ற கதை வாழ்வியல் தத்துவம் ஆகிறது. இதுபோல் சாதனை படைத்த இருபது பெண்கள் பற்றி எழுதி வெற்றி ஊர்வலத்தில் நம்மையும் சுகமாக பயணிக்க வைக்கிறார். சுருங்கக் கூறின் வினிதா மோகனின் எழுத்து வண்ண ஓவியத்தில் நாமே வண்ணங்களாக மாறி படித்து மகிழ்ந்து நமக்குள் inspiration vibrate ஆவது உறுதி. வாழ்த்துகள் வினிதா மோகன். பூங்கோதை கனகராஜன் , கவிதை படைப்பாளர், எழுத்தாளர், சமூக ஆர்வலர்.

வினிதா மோகன்

சிவராமன், நெறியாளர், ஆசை டிவி, வணக்கம். இளம் எழுத்தாளர் வினிதா மோகன் அவர்களை இந்தவார தமிழோசைக்காக நேர்காணல் செய்தேன். வினிதா மோகன் அண்மையில் சென்னையில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் தனது முதல் படைப்பான 'ஃபீனிக்ஸ் பெண்கள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். 'அகத்தியர் வீக்லி' தம்பி பரமசிவத்தின் அறிமுகத்தின் மூலம் அந்நூலைப் பெற்றுப் படித்தேன். வியந்தேன். விளிம்பு நிலையில் வாழ்க்கையைத் தொடங்கி வியத்தகு சாதனைகளை உலகளவில் புரிந்த இருபது பெண்களைப் பற்றிய சரிதை நூல் அது. அவரது இலகுவான எழுத்தாற்றல், தெளிவான கருத்தாற்றல், பொருத்தமான மொழி பெயர்ப்பாற்றல் நூல் முழுக்க விரவி வியக்க வைத்தன. ரோட்டரி சங்கத்தின் புல்லட் எடிட்டர் என்ற நிலையில் எழுத ஆரம்பித்தது, ரோட்டரி சங்கத்தின் தலைமைப் பொறுப்பில் சில கல்வி நிலையங்களில் உரையாற்றியது என ஒவ்வொரு கட்டத்திலும் சில ரோட்டரி ஆளுமைகளைக் கவரவே அவர்கள் ஊக்கம் தந்து வினிதாவை சிறப்பாக எழுத வைத்திருக்கின்றனர். ஒவ்வொரு பெண்ணும் படித்தறிய வேண்டிய உந்து சக்தி நூல் அது. நூலை ஒட்டி பல கேள்விகளுக்கு அவர் பதில் அளித்த விதம் அருமை. அவரின் 20 ஆதர்ச பெண் சாதனையாளர்கள் பற்றி அவர் நேர்காணலில் விவரித்த விதம் ஒட்டுமொத்த புத்தகத்தின் ஜூஸ் போல சுவையாக இருந்தது. பெண்களும் பெண்களின் மேம்பாட்டை விரும்புபவர்களும் கண்டிப்பாகக் காண வேண்டிய அந்த நேர்காணல் வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு ஆசை டிவியில் ஒளிபரப்பாகிறது. கண்டிப்பாய் பாருங்கள். தெரிந்த பெண்களை எல்லாம் பார்க்க வையுங்கள். சிவராமன், ஆசை டிவி.

வினிதா மோகன்

புத்தக அறிமுகம் விழா : சிறப்பு மிக்க சென்னை புத்தகக் காட்சி அரங்கில் 12.01. 2020 அன்று எனது முதல்புத்தகம் "பீனிக்ஸ் பெண்கள்" அறிமுகபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டது ஆசீர்வாதத்திற்குரிய மிகப்பெரிய வாய்ப்பாக கருதுகிறேன். இப்படிபட்ட அற்புதமான நிகழ்வில் திரு. ஒளிவண்ணன் அவர்கள் எழுதியுள்ள 'எண்ணங்களின் வண்ணங்கள்', பேராசிரியர் மருதநாயகம் ஐயா அவர்கள் எழுதிய 'மேலை நோக்கில் தமிழ் நாவல்கள்'( நாவல்கள் பற்றிய அருமையான தொகுப்பு ) மற்றும் 'தொல்காப்பியம்' (இன்றய தலைமுறைக்கு புரியும் பாணியில் எழுதியிருக்கிறார்.) என அனுபவம் மிக்க எழுத்தாளர்களுக்கு மத்தியில் அறிமுக எழுத்தாளராக எனது படைப்பில் வெளியான "பீனிக்ஸ் பெண்கள்" புத்தகத்தையும் அறிமுகம்படுத்தி இத் தருணம் நெகிழ்ச்சிக்குரிய தருணமாக ஆக்கி உள்ளனர். இத்தகைய வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த எமரால்டு பதிப்பகத்திற்கு எனது சிரம்தாழ்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். "பீனிக்ஸ் பெண்கள்"புத்தகத்தை மிகசிறப்பாக அறிமுகபடுத்திய பூங்கோதை கனகராஜ் அவர்களுக்கும் எனது நன்றிகள். புத்தக விமர்சகரும் மற்றும் இந்த "பீனிக்ஸ் பெண்கள்" புத்தகத்தை முழுமையாக படித்து அறிமுகபடுத்திய பூங்கோதை கனகராஜ் அவர்களின் கருது: # இந்தியாவில் தமிழகத்தை சார்ந்த பெண்ணில் துவங்கி இந்திய மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த இருபது பெண்களை தேர்ந்தெடுத்திருக்கும் விதம் அழகு. # புத்தகத்தில் இருக்கும் அணைத்து பெண்களும் எந்தவித அடிப்படை பின்புலமும் இல்லாமல் சுயமாக முன்னேறியவர்கள். # புத்தகம் வாசிக்கும் நண்பர்களுக்கான அற்புத படைப்பு "பீனிக்ஸ் பெண்கள்". # இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள் இது உங்கள் வாழ்வின் அடுத்த கட்ட நகர்விற்க்கு சிறு உந்து சக்தியாக இருக்கும். # புத்தகம் படிப்பவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டிய மிக சில புத்தகங்கள் ஒன்று. # புத்தகத்தை வாங்கி பரிசளிக்க விரும்புவர்களுக்கான அற்புதமான புத்தகம். என்று நிகழ்ச்சியில் புத்தகத்தின் முதல் வாசகராக தனது கருத்தை ஆழமாக பதிவிட்டிருக்கிறார். வாங்கி படித்து பயன் பெறுங்கள். நன்றியுடன்.., வினிதா மோகன்.


வினிதா மோகன்

As an Author I had a wonderful opportunity to meet great people from Rc of Tiruchirapalli and Tiruchirapalli Shakthi.





பீனிக்ஸ் பெண்கள்"(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.) இந்நூல் 2020 ஆம் ஆண்டின் மிக சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. இது மற்ற சுயசரிதை நூல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்நூலில் 20 பெண்களை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள போவதில்லை, நாம் யார் என யோசிக்க வைத்து நம் அடுத்த கட்ட நகர்விற்கு வழிவகுக்கிறது.

பதிவுகள் இல்லை

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :