பீனிக்ஸ் பெண்கள்

Start a discussion with your Author
எழுதியவர்

வினிதா மோகன்

வெளியிட்டது

ezhilini

வகை

ஐஎஸ்பிஎன்

9840696574

விளக்கம்

“பீனிக்ஸ் பெண்கள்” இந்த நூல், தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களை வென்று, தத்தம் துறைகளில் வரலாறு படைத்த 20 போராளிப் பெண்களின் வாழ்க்கைப் பதிவாகும். பல்வேறு நாடூகள்... பல துறைகள்... மாறுபட்ட சூழல்கள். எந்தவித வசதிவாய்ப்பும் இல்லாமல் “துணிவு” ஒன்றையே துணையாகக் கொண்டு, தடைகளைத் தகர்த்து “சாம்பலில் இருந்து மீண்டெழுந்த பீனிக்ஸ் பறவைகள்”. கடந்த 1980ஆம் ஆண்டுமுதல் தற்போதுவரை உலகின் கவனத்தை ஈர்த்த சாதனைப்பெண்களை இந்த நூலில் மையப்படுத்தி உள்ளேன். மற்ற சுயசரிதை நூல்களிலிருந்து இது ஒரு மாறுபட்ட படைப்பாகும். வாழ்க்கையில் நிறையச் சாதிக்க விரும்புபவர்களுக்கும் வாழ்வில் எதையாவது சாதித்தே தீரவேண்டும். என்ற இலட்சியதாகம் கொண்டவர்களுக்காகவுமே இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த தங்கமங்கையரின், வாழ்க்கையிலிருந்து நீங்கள் | கற்றுக்கொள்ளவும், பெற்றுக்கொள்ளவும் இந்நூலில் நிறைய உள்ளன. இந்த நூலை வாசிப்பதால் உங்கள் பிரச்சனைகளுக்குத்தீர்வு கிடைக்கும்: உங்கள் வாழ்வும் சிறப்படையும் என்று உறுதியாக நம்புகிறேன். “நாம் ஏன் பிறந்தோம்?” என்ற கேள்விக்கான விடைகள் நூலெங்கும் கொட்டிக் கிடக்கின்றன. நூலை வாசித்துப்பாருங்கள்: வானத்தில் பறப்பதைப் போல் உணர்வீர்கள்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

வினிதா மோகன்

எழுத்தாளர் பற்றி: திருமதி வினிதா மோகன் கரூர் மண்ணின் புதல்வி, பி.எஸ்.ஸி. பட்டம் பெற்றவர், பள்ளி, கல்லூரி நாட்களில் வாழ்வில் ““தனித்தடம்"” பதிக்கவேண்டும் என்ற கனவுடன் வலம் வந்தவர். சமூகத்தின் மீதான அக்கறையையும் அப்போதே வளர்த்துக்கொண்டவர். இன்று ஒரு சிறந்த இல்லத்தரசி, வளர்ந்துவரும் தொழிலதீபர், கவனம் ஈர்க்கும் ரோட்டரி நண்பர், 2018-2019ஆம் ஆண்டில் ரோட்டரி மாவட்டம் 300௦ இல் மாவட்ட உதவி ஆளுனராகச் சிறப்பாகப் பணியாற்றியவர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, மாலத்தீவு, சிங்கப்பூர் முதலிய நாடுகளுக்குச் சென்று வந்தவர். நூல் வாசிப்பு இவரது சுவாசம்; மக்கள் சேவை இவரது நேசம்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

Vinitha Mohan20-Feb-2020 08:49:00
புத்தகம்:

"பீனிக்ஸ் பெண்கள்"(தன்னம்பிக்கை ஊட்டும் உலகளாவிய பெண்களின் வெற்றி வரலாறு.)

இந்நூல் 2020 ஆம் ஆண்டின் மிக சிறந்த படைப்பாக வெளிவந்துள்ளது. இது மற்ற சுயசரிதை நூல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இந்நூலில் 20 பெண்களை பற்றி மட்டும் தெரிந்து கொள்ள போவதில்லை, நாம் யார் என யோசிக்க வைத்து நம் அடுத்த கட்ட நகர்விற்கு வழிவகுக்கிறது.

இப்படி பட்ட அருமையான புத்தகம் சென்னை புத்தக காட்சி அரங்கில் வெளியாகி அனைவரின் பாராட்டையும் பெற்றது என்பது குறிப்பிட தக்கது.

இந்நூல் நமது கரூரில் வெளியாக(23.02.2020) உள்ளது, விற்பனைக்கும் உள்ளது.

மற்றவர்களுக்கு பரிசளிக்க மிக சிறந்த புத்தகமாக இது இருக்கும்.

வாங்கி படியுங்கள் பயன் பெறுங்கள..!

வினிதா மோகன்

சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவையைப் போல சமுதாயத்தின் அடித்தட்டில் இருந்து ஃபீனிக்ஸ் பறவையாய் தமக்குத்தாமே உருவமும் உயரமும் கொடுத்து சிகரம் தொட்ட சாதனைப் பெண்களின் வரலாறு!

சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்காக சாதித்து உயர்ந்த சகோதரி வினிதா மோகன் அருமையான மொழிநடையில் இன்றைய இளைய தலைமுறையினர் ரசிக்கும் வகையில் தன்னம்பிக்கை விருந்து படைத்துள்ளார்.

ஃபீனிக்ஸ் பெண்கள் அவருடைய முதல் புத்தகம் என்பதை நம்ப மறுக்கிறது மனம். வியாபாரம், குடும்பம், சமூக சேவை ஆகிய மூன்று துறைகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்த சகோதரி வினிதா தற்பொழுது தனது முதல் புத்தகத்திலேயே எழுத்துத் துறையிலும் தனக்கான சிறப்பிடத்தை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.

சாதிக்கத் துடிக்கும் ஆண் பெண் ஒவ்வொருவரின் கையிலும் இப்புத்தகம் தவழ வாழ்த்துக்கள்.

முனைவர் சொ.ராமசுப்ரமணியன்
(முதன்மை முதல்வர், கரூர் பரணி பார்க் கல்வி நிறுவனங்கள்)
மேனாள் உறுப்பினர்,
தேசிய ஆட்சி மொழி ஆலோசனைக் குழு, இந்திய அரசு - பாதுகாப்பு அமைச்சகம்,
புது தில்லி.

வினிதா மோகன்

Hello Vinita, Vow, vow, vow! Jus completed reading your book. Excellent selection of personalities, coherent and lucid narration, interesting to read, did not feel like keeping the book down ...wanted to read next, next, next......superbly written! Congratulations to you!

Mrs. Nallini,
District Chairman,
Inner Wheel District 323.

Vinitha Mohan

Book Launch function at our home Town ceremony went off very well with support of Loving hearts and Rc Karur Angels... On behalf of Loving hearts family members I thank each and every one who participated in this function. I also thank our Awesome Guests.

Book reviewers Dr. Ramesh and Principal Dr.Ramasubramaniyan gave meaningful reviews about the Phoenix penkal Book... After their speech many people went out and got the book from our book stall and came back to the hall again. Its a huge success to this book. The legends like Dr.Ramesh and Principal Dr.Ramasubramaniyan words of advice to the youth was very realistic.
Karur Medical College Dean Dr. Rosy Vennila delivered her address in which she spoke about the truth about the personalities inside the book in her own way. She was also impressed by the other guests speech.
Thiru. Pari IPS addressed the gathering with the mind blowing information about women. Everybody felt elated in his presence. His suggestions provided us a guideline to proceed more precisely for the betterment of this noble cause. We hope that this kindness and cooperation will remain to continue in the future.

Its give huge impact to the public about this 'Phoenix Penkal' Book.
Really we had wonderful legends as our Chief Guests.

These legends words gave more and more meaning to this outstanding book 'Phoenix Penkal'.
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.