பனித்துளியில் சமுத்திரம்

Start a discussion with your Author
வெளியிட்டது

Ezhilini

வகை

கவிதைகள்

ஐஎஸ்பிஎன்

9789387681354

விளக்கம்

ஓர்‌ ஆணின்‌ உணர்வுப்பூர்வக்‌ காதலின்‌ போராட்டத்தை, ஒரு பெண்‌ வாயிலாக சிறிது சிறிதாக உருவான எனது கவிதைகளை இன்று திரட்டி பனித்துளியில்‌ சமுத்திரமாக தங்களின்‌ கரங்களில்‌ அளித்துள்ளது ‌.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

உமா முருகானந்தம்

எழுத்தாளர் பற்றி: உமாமகேஸ்வரி முருகானந்தம். கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழின் மீதுள்ள பற்றினால் எழுத ஆரம்பித்து இன்று பனித்துளியில் சமுத்திரம் என்ற தலைப்பில் கவிதைதொகுப்பு நூல் வெளியிட்டு உள்ளேன்.

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

RAJA A26-Aug-2019 10:40:32
வணக்கம் ?

உமா முருகானந்தம்

இலக்கணம் மாறா
இலக்கியப்பிழை விதவை

புள்ளிகள் தீர்மானிக்கிறது
இருக்கும் இடத்தை

ஏங்கினாலும் கிடைக்காத
புள்ளி விதவையின் நெற்றி

உமா முருகானந்தம்

உன் பேனா முனை ஆயிரம் கதை பேசலாம்
உன்னோடு நான் பேசும் ஒரு நிமிட கதையை எழுதி முடிக்க

அன்றாட வேலைகளில் அரைகுறை காட்ட திண்டாட வைத்தாய்யடா நிமிட காதலுக்காக

தினந்தோறும் நிமிடங்கள் மட்டுமே ஒதுக்குகிறாயே மணிகளை ஒதுக்க மனம் இல்லாமல் போனது ஏனோ

என் கேள்வி உன்னை பாதிக்கும் என்றெண்ணி என் மனவீட்டில் உன்னை வைத்து பூட்டிட்டேன் வாய்க்கு

பாதிப்பு என்னவோ எனக்குமட்டுமே தான்
மெளனமொழி மனத்திற்கு புரியாதல்லவா

உமா முருகானந்தம்

பெற்றவளோ திக்கித்து திகைக்க
பிள்ளை இவளோ செய்வதறியாது நிற்க

கால்பந்து போலவே இவளது வாழ்க்கை எந்த பக்கம் திரும்பினாலும் உதை

சிறகுகளை பிய்த்துக்கொண்டு பறஎன்று சொல்வதைப்போல

வேண்டாமே இம்மானுடம் என்று சொன்னது இச்சமூகம்

கருணை உள்ளமும் அவளை ஏற்றுக் கொண்டதன் பின் உருவில்

காலத்தின் கொடுமை இம்மனிதபிறவிஇப்பூமியில் வாழ்ந்து ஆக வேண்டும் என்ற விதி

கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியாமல் பயத்தின் விளிம்பில்

மனவளர்ச்சி குன்றிய குழந்தை

Olivannan G

அருமை.... தங்கள் புத்தகத்தை எங்கள் பதிப்பகத்தின் வாயிலாக வெளியிட்டமைக்கு நன்றி. மிக்க மகிழ்ச்சி

உமா முருகானந்தம்

அத்துணை நிறைவுகளிலும் மிச்சமாய் நான் இருப்பேன்

நீ தந்த நினைவுகளே என் தலையணைப்பூக்கள்

நம்மின் பிரிவு விதி அன்றே விலகல் அல்ல
தூரங்கள் நிர்ணயப்பதில்லை காதலை

முகம் காண நம் காதலில் வென்று விட்டேன் விதியை

அன்பானவனே நீ சொன்ன ஒற்றைச் சொல்லிலே வாழ்ந்துகொண்டிருக்கிறது என் உயிர்

நிஜமென்று நினைவில் வாழும் என் காதலுக்கு நிறைவாக நீ

உமா முருகானந்தம்

ஒரு நாள் பொழுதில் பாதி நேரத்தை உன் நிழல்படத்தை ரசிப்பதிலே களவாடி கொள்கிறாய்.....

மீதமுள்ள நேரத்தையோ உன் நினைவுகளைக் கொண்டு ஆக்கிரமித்து விடுகிறாய்..

நான் என் செய்வேன் வசியா ..

உமா முருகானந்தம்

கரு மேகங்கள் வானிலே சூழ்ந்தது
மழை வருமா என்றேண்ணினேன்
வரவில்லை

ஜில்லென்று காற்று வீசியது
மழை வருமா என்றேண்ணினேன்
வரவில்லை

இடியும் மின்னலுமாய் பூமியில் வந்திறங்கினாய்
மழை வருமா என்றேண்ணினேன்
வரவில்லை

உனை மட்டுமே என் கண்கள் பார்த்துக்கொண்டேயிருந்தது.
இனியோன்றும் செய்வதற்கில்லை என்று தன் அழுகையை கொட்டித்தீர்த்தது.

அவ்வழுகையில் என் உள்ளம் வழிந்தோடி உருகிச்சொன்னது நம்மைச் சேர்த்தது காதலின் சக்தி அல்லவோ❣
No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.