Published by

எழிலினி பதிப்பகம்

Genre

Ancient Tamil Trade

ISBN

9789387681828

Description

திருவிழா என்றால் மாரியம்மன் பண்டிகை, பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், தமிழர் தைத்திருநாள் கொண்டாடுதல் ஆகியவைதான் இருந்தன. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் பல வகையான வடநாட்டு தெய்வங்களும் புதுப்புது பண்டிகைகளும் தொடர்ந்து புகுந்து கொண்டிருப்பதனைப் பார்த்தேன். நமது கோவில்களில் கூட தொன்மையான நமது வழிபாட்டு முறைகளை மாற்றி அமைக்க முயற்சிகள் நடப்பதனையும் கவனித்தேன். ஏதோ எனது குலசாமிக்கு கூட வேற்று மொழியில் பிரார்த்தனை செய்பவர்கள் மூலமாக பூசை செய்தால் தான் வேண்டுபவர்களின் விருப்பங்கள் நிறைவேறுவது போல ஒரு சுயநல சமூகத்தினை உருவாக்க முயற்சிகள் நடப்பதையும் கண்டேன். இன்னும் ஒரு படி மேலே சொல்ல வேண்டுமென்றால் எனது பிள்ளைகளே கூட வடமொழியையும், வடநாட்டு தெய்வங்களையும், வடநாட்டு கலாச்சாரத்தையும் நம் தமிழர் வழிபாட்டு முறையை விட, நம் தமிழர் வாழ்வியலை விட, நம் தமிழ் மொழியை விட சிறந்தது போல பாவிக்கும் நிலையைக் கண்டு வருந்தினேன். இந்நிலையில் தான் நமது தமிழர்தம் தொன்மையான வாழ்வியல் வழிபாட்டுமுறைகள், மொழியின் சிறப்பு, இனத்தின் தனித்துவம் ஆகியன பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்றதொரு ஆர்வம்

Share with your friends:

Purchase

Let people know you are reading this book

Raja Tamizhmaran

About the Author: தமிழ்ச் சமூகத்திற்கு எனது முதற்கண் வணக்கம். நான் நமது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகிலுள்ள வட்டூர் என்ற ஊராட்சியில் பிறந்தவன். விவசாய குடும்பத்தினன். பிழைப்புக்காக எனது தந்தையோடு சேலத்தில் குடியேறினோம், இருப்பினும் எனது பூர்வீகமும் அங்குள்ள எனது சொந்தங்களும், வானம் பார்த்த மேட்டுக்காடு பூமியும் நிலையாக எங்களை வாழ வைத்து வருகிறது. நான் எனது குழந்தைப் பருவத்தில் எனது தாத்தா மாரப்ப *கவுண்டர் அவர்களோடு எனது குலசாமி சித்தளந்தூர் அம்மன் கோவிலுக்கும் (அம்மனோடு கன்னிமார்களும், ஐயனாரும் இடம் பெற்றிருக்கும்), புதுப்புளியம்பட்டி செல்லக் குமாரசாமி கோயிலுக்கும்(குமரனோடு குப்பியண்ணனும் இடம் பெற்றிருக்கும்), எங்களது ஊருக்கு அருகிலுள்ள அத்தாயி அம்மன் கோவிலுக்கும், முனியப்பன் கோவிலுக்கும் செல்வது உண்டு. அங்கெல்லாம் எனது பங்காளிகளும், மாமன்களுமே கோவிலில், நம் தாய்மொழியாம் தமிழிலேயே வேண்டி பூசை செய்யும் பூசாரியாகவும் உள்ளனர்..

Introduction:
Sample Pages:
Table of Contents:
Additional and Supplementary Material:
Click Here

No Records

No feeds available
If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.
Opportunity to increase your reader base and boost sales

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).