நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.

  • முத்தமிழ் விரும்பி
இலக்கிய நடைகள்:

கவிதைகள்,

தாய் நாடு:

India

நூல்கள் எழுதப்பட்ட மொழிகள் :

Tamil

எழுத்தாளர் பற்றி:

கவிஞர் பொறிஞர் முத்தமிழ் விரும்பி தஞ்சை மண்ணை சேர்ந்தவர்.கோவை பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரியில் பொறியியல் படித்தவர்.திருச்சி பெல் நிறுவனத்தில் துணை இயக்குனராக பணியாற்றிவருகிறார்.
நெருஞ்சி இலக்கிய இயக்கத்தை நிறுவி ஆண்டுதோறும் கவிஞர் பத்திரிகையாளர் எழுத்தாளர் எனப் பல துறை சார்ந்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகிறார்.
நெருஞ்சி என்னும் காலாண்டு இலக்கிய இதழை நடத்திவருகிறார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் கல்வி குழு உறுப்பினர் ஆவார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும் ஆவார்.
கவிஞருடைய பூ மர நிழல், திட்டிவாசல் பெண்ணொருத்தி, உன்னோடு உரையாடுதல், காதலின் மொழி ஆகிய கவிதை நூல்கள் ஆங்கிலத்தில் இந்நூலாசிரியர் முனைவர் ராஜேஸ்வரி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, சென்னை எமெரால்டு பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது.
கவிஞருடைய பூமர நிழல் கவிதைத் தொகுப்புக்கு ‘கவிதை உறவு 2004’ முதற் பரிசு வழங்கியது. மேலும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியு செஞ்சுரி புத்தக நிறுவனம் இணைந்து நடத்திய பாரதி விழா 2004 பரிசுப் போட்டியிலும்பரிசு பெற்றது.
கவிஞர்கடற்குதிரைபதிப்பகத்தின் மூலமாக கவிஞர் பலருடைய கவிதைகளையும் வேறு பல நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டுள்ளார். அண்மையில் சந்தாலி மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பை வெளியிட்டு இருக்கிறார்.
மலேசியாவில் மலாய் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கவிஞருக்குத் தமிழ் இலக்கியச் செம்மல்என்ற விருது வழங்கப்பட்டது. .
கவிஞருடைய , நேற்றின் பாதங்கள், தஞ்சை பெருவுடை நிலம் ஆகிய கவிதை நூல்கள் விரைவில் அச்சில் வெளி வரவிருக்கின்றனஇவ்விரு கவிதைத் தொகுப்புகளும் கட்டுரைகளும் விரைவில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படஇருக்கின்றன.
கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவிதைகளை கோவை பாரதியார் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையும் கொங்கு கலை அறிவியல் கல்லூரி போன்ற வேறு சில தன்னாட்சி கல்லூரிகளும் பாடமாக வைத்துள்ளன. தமிழ் ஆராய்ச்சியாளர்கள் கவிஞர் முத்தமிழ் விரும்பியின் கவிதைகளில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளனர்.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

நற்சான்றிதழ்கள் செய்த சாதனைகள் :