பெண்மொழி

Start a discussion with your Author
வெளியிட்டது

அமேசான் கிண்டில் (AMAZON KINDLE )

வகை

உடல் நலம்,குடும்பம்,சமூகப் பிரச்சனைகள்,பெண்கள் மேம்பாடு

ஐஎஸ்பிஎன்

B072LQY6ST

விளக்கம்

பெண்களுக்கு மிகவும் தேவையான புத்தகம். அவர்களது பல்வேறு பிரச்சினைகளையும் சவால்களையும் அதற்கான தீர்வுகளையும் எளிய நடையில் விளக்கப்பட்டுள்ளது.

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

தேனம்மை லெக்ஷ்மணன் ( Thenammai Lakshmanan)

எழுத்தாளர் பற்றி: தேனம்மைலெக்ஷ்மணன் இளங்கலை வேதியல் பட்டதாரி, ( பாத்திமா கல்லூரி, மதுரை) , ( முதுநிலை அரசியல் அறிவியல்) தற்போது புத்தக ஆசிரியர், சுதந்திர எழுத்தாளர், பத்ரிக்கையாளர்,( ஜர்னலிஸ்ட்), , கவிஞர், வலைப்பதிவர், சிறப்புப் பேச்சாளர், வசன கர்த்தா, பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.) தேனம்மை லெக்ஷ்மணனின் படைப்புலகம் என்ற நூல் இவரைப்பற்றி வெளியாகி உள்ளது. இது காரைக்குடியில் நடைபெற்ற இந்திய ஆசிய கவிஞர்கள் மாநாட்டில் 2017 நவம்பர் 27, 28 ஆகிய தினங்களில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. அதில் இவருடைய கவிதை ஒன்று மலாய் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கப்பட்டது. அழகப்பா பல்கலையில் 20 ஆம் நூற்றாண்டு புதின ஆசிரியர்கள் என்ற தலைப்பில் இவரது படைப்புகள் பற்றிய விபரங்களையும் தொகுத்து 2019 ஆண்டில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள். அதே கருத்தரங்கில் இவர் 20 நூற்றாண்டு புதின ஆசிரியர்கள் பற்றி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார். அழகப்பா பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வித்திட்டத்தில் இவரது கவிதை ஒன்று (சூலும் சூலமும்) 2019 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. தினமணி & காரைக்குடி புத்தகத் திருவிழா ( 2012) இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இருமுறை ( 2017 இல் இன்னொன்று ) ஊக்கப்பரிசுபெற்றவர். தினமலரில் நான்கு சிறுகதைகள், தினமலர் வாரமலரில் ஒரு சிறுகதையும், குங்குமத்தில் நான்கு சிறுகதைகள் புதிய தரிசனத்தில் இரு சிறுகதைகள் பெண்கள் ராஜ்ஜியத்தில் ஒரு சிறுகதையும் அமெரிக்கத் தென்றலில் இரண்டு சிறுகதைகளும் ஆச்சி வந்தாச்சுவில் ஒரு சிறுகதையும் வெளியாகி உள்ளன. பன்னாட்டு புலம் பெயர் எழுத்தாளர் ஒன்றியத்தின் சிறுகதைப் போட்டியில் இவரது சூலம் என்ற சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றுள்ளது. ரியாத் தமிழ்ச்சங்கம் நடத்திய போட்டியில் இவரது சூலாட்டுக்குட்டி என்ற சிறுகதை ஊக்கப்பரிசு பெற்றுள்ளது. ”செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு” என்ற நான்காம் உலகத் தமிழ் கருத்தரங்கத்தில் “ வெ.தெ. மாணிக்கனார் இயம்பும் அகத்திணையின் அகம் “ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்துள்ளார். அது அன்றே புத்தகமாக்கம் செய்து வழங்கப்பட்டது. தினமலர் சிறுவர்மலரில் இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் இதுவரை 90 சிறுகதைகள் வெளியாகி உள்ளன..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.