கொஞ்சம்‌ வீவாதீத்தும்‌… கொஞ்சம்‌ மெளனீத்தும்‌

Start a discussion with your Author
வெளியிட்டது

Ezhilini

வகை

ஐஎஸ்பிஎன்

9789387681613

விளக்கம்

இந்த கட்டுரைத் தொகுப்பை படிப்பதன் மூலமாக வாசகர்கள் பயனடைவார்கள் என்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. தாங்கள் படிப்பது மட்டுமல்ல, கற்றுணர்ந்ததை, மற்றவருடன் பகிர்ந்து கொள்வதன்மூலம் நம்மை மட்டுமல்ல நம்மைச் சார்ந்தவர்களிடமும் ஒரு இனிமையான உலகத்தை உருவாக்கிட முடியும்

உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:

புத்தகம் வாங்க

நீங்கள் இந்த புத்தகத்தைப் படிக்கிறீர்கள் என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துங்கள்

பவித்ரா நந்தகுமார்

எழுத்தாளர் பற்றி: பவித்ரா நந்தகுமார் - விவரக் குறிப்பு தமிழ்ச் சிறுகதைகளின் நெடும்பயண வரலாற்றில் தன்னையும் முனைப்புடன் இணைத்துக் கொண்டவர் திருமதி. பவித்ரா நந்தகுமார். ஆரணி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் ஆங்கில பட்டதாரி ஆசிரியரும் எழுத்தாளருமான திருமதி. பவித்ரா நந்தகுமார் (வயது 40), ஆங்கிலம் மற்றும் தமிழ் முதுகலை பட்டப்படிப்பை முடித்தவர் ஒரு படைப்பாளியாக தமிழகத்தில் அறியப்பட்டுள்ள பவித்ரா நந்தகுமாருக்கு தமிழக அரசின் 2015 ஆம் ஆண்டுக்கான சிறந்த சிறுகதை நூலாசிரியர் விருது சென்ற ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டது. இதுவரை ‘சற்றே பெரிய தனிமை’, ’பிடிக்குள் அடங்கா மௌனம்’, ‘வன்கொடுமைக்கு உட்பட்டவளின் பிராது’ ஆகிய மூன்று சிறுகதை நூல்களும் ‘வெற்றிடத்தின் நிர்வாணம்’ எனும் கவிதைத் தொகுப்பும் ‘மாவளி’ எனும் குறுங்கதை தொகுப்பும் என ஐந்து நூல்கள் வெளிவந்துள்ளன. 2014 ஆம் ஆண்டு நெய்வேலி புத்தகக் கண்காட்சியில் சிறந்த எழுத்தாளர் என அடையாளப்படுத்தி பொற்கிழி வழங்கி சிறப்பித்தார் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர். 2015 கதைத் தமிழ் மாநாட்டில், கோவை தமிழ் ஐயா கல்விக்கழகம் இவருடைய சிறுகதைத் திறனை பாராட்டி ‘ராஜம்கிருஷ்ணன்’ விருதை வழங்கி கவுரவித்தனர். மேலும் அவ்வருடத்திலேயே விஐடி வேந்தர், கல்விக்கோ திரு. ஜி. விஸ்வநாதன் அவர்கள் தமிழர் உலகம் இதழ் சார்பில் ’தமிழன்னை’ விருது வழங்கினார். 2016 ல் சென்னை இலக்கியச்சோலை இதழ் ‘சிறுகதைச் சிற்பி’ விருது வழங்கி சிறப்பித்தது. 2017, மார்ச் மாதம் வேலூர் ஊரீசு கல்லூரியில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தினத்தில் ‘சிறுகதைத் தாரகை’ விருது இவரைத் தேடி வந்தது. அக்டோபரில் வேலூர் வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கம் இவருக்கு ‘வீரமாமுனிவர் விருது’ வழங்கி சிறப்பித்தது. எழுத்துப்பணியை தாண்டி ஒரு ஆசிரியையாக மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில் தன்னை முனைப்பாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மாணவர்களின் படைப்பாற்றலை மேம்படுத்த பெரிதும் ஊக்கப்படுத்தியவர். 2017 – 2018 கல்வியாண்டில் சென்னையில் உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்ட குழுவின் அழைப்பின் பேரில் “படைப்பாற்றல் திறனை மாணவர்களிடம் வளர்ப்பது எப்படி?” எனும் பயிலரங்கில் கலந்து கொண்டு தன் கருத்துக்களை அங்கு பதிவு செய்து பாடத்திட்ட குழுவின் பாராட்டைப் பெற்றவர். மதிப்பெண்களை மட்டுமே குறிவைத்து ஓடும் இன்றைய கல்விதிட்டத்துடன் வாழ்வின் நுண்கலைகள் மீதும் இலக்கியத்தின் மீதும் மாணவச் செல்வங்களுக்கு ஆர்வம் ஏற்படுத்தி அவர்களை படைப்பாளர்களாகவும் மாற்றுவது இவரின் கனவு. அதற்கான ஆக்கப்பூர்வமான பணிகளை அவர்தம் வகுப்புகளில் நிகழ்த்தி வருகிறார்..

அறிமுகம்:
மாதிரி பக்கங்கள்:
பொருளடக்கம்:
கூடுதல் மற்றும் துணைப் பொருள்:
இங்கே கிளிக் செய்க

பதிவுகள் இல்லை

No feeds available
நீங்கள் ஒரு
எழுத்தாளர் என்றால்இங்கே கிளிக் செய்க

உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு.
உங்கள் வாசகர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் விற்பனையை கூட்டவும் ஒர் வாய்ப்பு

நீங்கள் ஒரு
வாசகர் என்றாலஇங்கே கிளிக் செய்க

உங்களுக்கு பிரியமான எழுத்தாளரோடு தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் புத்தகத்திற்கான கூடுதல் மதிப்பினை செய்தி, காணொளி, கேட்பொலி மூலம் கைப்பேசி அல்லது கணினி வாயிலாக பெறுங்கள்.