If you are
an AuthorClick Here

Opportunity to increase your reader base and boost sales.

If you are
a ReaderClick Here

Engage with your favorite authors. Get more value and content (video, audio, images) through your phone (or computer).

  • Nithiyananthan
Genres:

Short Stories,

Home Country:

United Kingdom

Languages Written:

Tamil

About the Author:

பதுளையைப் பிறப்பிடமாகக்கொண்ட முத்தையாபிள்ளை நித்தியானந்தன் (1948) பதுளை ஊவாக் கல்லூரியிலிருந்து கொழும்புப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி,
பொருளியலில் சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் 'தினகரன்' நாளிதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். பின் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொருளியல் துறையில் விரிவுரையாளரானார். 1983 இனவன்முறையைத் தொடர்ந்து தமிழ்நாடு சென்று, அங்கு 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'த் திட்டத்தில் இணைந்து பணியாற்றினார். அத்துடன், கோத்தகிரியில் இர.சிவலிங்கத்தின் தலைமையில் அமைந்திருந்த, தாயகம் திரும்பிய தமிழர்களின் அமைப்பிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
பின்னர் லண்டனுக்குப் புலம்பெயர்ந்து, சில காலம் ஹேய்சில் பொருளியல் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தீபம் தொலைக் காட்சியின் செய்திப்பிரிவின் தலைவராகச் சேவையாற்றினார். தெளிவத்தை ஜோசப், என்.எஸ்.எம்.ராமையா, சி.வி.வேலுப்பிள்ளை, சாரல்நாடன், மாத்தளை வடிவேலன் ஆகிய மலையக எழுத்தாளர்களின்
நூல்களை வெளிக்கொணர்வதில் முன்னின்று உழைத்திருக்கிறார். மலையகத் தமிழர்கள்
மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை ஆராய்ந்து இவர் எழுதிய 'கூலித்தமிழ்' (2014) கனடாவின் இலக்கியத் தோட்டத்தின் சிறந்த அபுனைவு நூல் விருதினைப் பெற்றது.
துணைவி மீனாள், புதல்விகள் தென்றல், தேனுகாவுடன் லண்டனில் வாழ்ந்து வருகிறார்.

Share with your friends:

Testimonials / Achievements: